Aththivaaram Illaatha Inthumatham – (அத்திவாரம் இல்லாத இந்துமதம்)

  • ₹ 210.00
  • Save ₹ 34000


"You may have understood and/or recognised one or more of those greetings in a number of languages in a gathering, but if the conversation went any further, would you be able to follow?

"How would you feel in the place of worship, if the prayers are conducted in a language which you barely understand?"

This book is for Tamil Hindus. You may be living in India, Sri Lanka or in any part of the world; it doesn't matter, this book would serve its purpose if you can read and understand Tamil. Sanskrit is a dead language and now spoken by less than 1% of Indians and is mostly used by Hindu priests during religious ceremonies. Does any Tamil Hindu understand the verses chanted in Sanskrit during Hindu rituals? Does the Brahmins by birth who chants mantras understand the meaning of them? Why we Tamils are in this fantasy? Is it time for us to ameliorate?

சமக்கிருதம் (Sanskrit) ஒரு இறந்து பட்டு புதைக்கப்பட்ட மொழி. இந்த மொழிக்கும் தமிழ் மொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என 1856ம்ஆண்டிலேயேRev. R Caldwell என்கிற ஆங்கிலேயரால் நிரூபணம் ஆகிவிட்டது. தற்பொழுது இதற்கான ஆயிரம் ஆதாரங்கள் இணையதளங்களில் கிடைக்கின்றன.

இவ்வளவுக்கும் பின், நாம் தமிழர்கள் ஏன் இன்னமும் சமக்கிருதமொழியை பற்றி அது கூறியுள்ள விடயங்களை பற்றி, அதன் அர்த்தங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறோம்? அது சமக்கிருதமொழியின்பிழையோ அல்லது பிறப்பால் பிராமணர்களின்பிழையோ கிடையாது.

அது தமிழர்களின் பிழை. கடவுளை வணங்க சமக்கிருத மந்திரம், திருமணம் செய்ய சமக்கிருதமந்திரங்கள், புதுமனைபுகுவிழாவிற்குசமக்கிருத மந்திரம், கருமாதி செய்யக்கூடசமக்கிருத மந்திரம். இப்படி தமிழரின் அன்றாட வாழ்வியலில் இந்த இறந்து பட்டமொழியை அனுமதித்தது நாம்தான்.

எந்த தமிழருக்காவதுசொல்லப்படுகின்றமந்திரங்களின் அர்த்தங்கள் தெரியுமா? மந்திரம் சொல்லுகின்றபிராமணரை இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டதுண்டா? கிடையாது. சொல்லுகின்றபிராமணருக்கே அதன் அர்த்தங்கள் தெரியுமா? கேள்விக்கிடமானது.

இந்த இறந்துபட்டஎமக்கு புரியாத சமக்கிருதத்தை வைத்து, நாம் எப்படி ஏமாற்றப்பட்டோம், ஏமாறுகின்றோம் என இயன்றவரை, உசாத்துணை நூல்களின்துணையுடன், சுயமாக சிந்தித்து எழுதியுள்ளேன். இப்புத்தகத்தைவாசித்தபின், நீங்களும் சுயமாக சிந்தித்து பாருங்கள்.பயன்படலாம்! பயன்படும் என்பது என் நம்பிக்கை.

About the Author: My name is Jeyaratnam (Nesamany Puththiran) and I am a self-published author and an avid reader up here in Sydney. You might think I became an author because Sydney is in COVID lockdown, but no I was an author first and moved to the lockdown second. I am a non-fiction writer about Tamil, which means I spend most of my time explaining to people why it is good to be a Tamil.

When I am not writing, I am reading Tamil literature books like "Thirukural, Akananooru, Puranaanooru, Silapathikaaram etc, English translation of Hindu scripts and History of Sri Lankan Tamils.

However, this is the first time I am publishing a hard copy of a book and I need your support.

அணிந்துரை: சி..தயாநிதி – ( கவிஞர் கரவைதயா) தமிழ் முதுகலைமாணி இலக்கியம் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இந்தியா).

யாழ்வடமராட்சிதும்பளையைபிறப்பிடமாககொண்ட திரு சிவபாதம்ஜெயரட்ணம், நூல் ஆசிரியர் அவர்களின், "நேசமணி புத்திரன் " எனும்புனைபெயரில்ஆக்கங்களை எழுதி வெளியிடும் ஒப்பற்ற தமிழ்த்தொண்டுபாராட்டுக்குரியதாகும்.காலம் சென்ற சிவபாதம், நேசமணிஆகியோரின்புதல்வரான திரு ஜெயரட்ணம் அவர்கள் யாழ்ப்பாணம்ஹாட்லிகல்லூரியில் தனது கல்வியை நிறைவு செய்து தமிழ் இலக்கியநூல்களில்தீராதகாதலால் இராமாயணம் மகாபாரதம் திருக்குறள் பாரதி பாடல்கள் உள்ளிட்ட அத்தனை நூல்களையும் கற்று தமிழ் புலமை கொண்டு விளங்குகின்றார் என்பது இங்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. விவசாயவிஞ்ஞானபட்டதாரியாக விளங்கும் நூலாசிரியர் அவுஸ்திரேலிய நாட்டில் தமிழ் நூல்களின் உண்மை தன்மை பற்றியும் சமய அனுஷ்டானங்களில் அறியாமை பற்றியும் மிகத் தைரியமாக ஆதாரபூர்வமாக எழுதுவது என்பது வரவேற்கக்கூடிய ஒரு செயலாகும். தமிழ் புத்தக உலகில் அறிமுகமாகும்எழுத்தாளர்களில் திரு ஜெயரட்ணம் திறனாய்வு செய்து இருக்கும் விடயம் "அத்திவாரம் இல்லாத இந்து மதம்" என்ற நூலாகும். நூலாசிரியர் அவர்கள் இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியும் அவற்றில் காணக்கிடைக்கின்றமுன்னுக்குப்பின் முரண் பாடு உடைய விடயங்களைமிகத்தெளிவாக தனது உசாத்துணை நூல்கள் துணையுடன்வெளியிட்டிருக்கின்றார்.

வாசகர் அணிந்துரை: சுமதி இராஜதுரை
ஆதாரத்துடனானதகவல்கள்: அண்ணா தான் தந்துள்ள அத்தனை தகவல்களுக்கும் தக்க ஆதாரங்களைதந்துள்ளார். இன்னார் எழுதிய இந்த புத்தகத்தில் இந்த அதிகாரத்தில்இத்தனையாவது சூத்திரம் அல்லது இன்னார் எழுதிய இந்த புத்தகத்தில், இந்த பக்கத்தில் இந்த வாசகம் உள்ளது என கோடிட்டுகூறியிருப்பார்.
எழுத்துக்களில் உள்ள நகைச்சுவை உணர்வு: எந்த தீவிர தகவல் ஆயினும், குற்றசாட்டுகள் எனினும், அவர் எழுத்துக்களில் எங்கள் ஊர் நகைச்சுவை உணர்வுகள் பிரதிபலிக்கும். இவை நான் மிகவும் இரசித்தவிடயம்.

 

  • Paperback: 132 pages
  • Publisher: White Falcon Publishing; 1 edition (2021)
  • Author: Sivapatham Jeyaratnam-  (நேசமணி புத்திரன்)
  • ISBN-13: 9781636403328
  • Product Dimensions:  6 x 1 x 9 Inch

Indian Edition available on:

   


We Also Recommend